லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த கோல்ட் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அதை தொடர்ந்து கைவசம் ஜவான், நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதில் நயன்தாரா 75 திரைப்படம் குறித்து தகவல்கள் அடுத்தடுத்து வெளி வருகின்றன நயன்தாரா 75 திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடிக்க இருக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறாராம். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது இப்படி திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா பற்றிய புதிய மற்றும் பழைய செய்திகள் இணையதள பக்கங்களில் உலா வருவது வழக்கம் அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது மணிரத்தினம் கையால் விருதை வாங்கிய நயன்தாரா அதன் பிறகு மணிரத்தினம் படம் குறித்து பேசி உள்ளார் அது குறித்து விலாவரியாக பார்ப்போம்..
மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும் எனக்கும் அவர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அது கைநழுவி போனது ஆனால் எதிர்காலத்தில் அவர் படத்தில் நடிப்பேன் என கூறினார் ஆனால் மணிரத்தினத்தின் எந்த படத்தை நயன்தாரா மீஸ் செய்தார் என்பது குறித்து அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை..
ஆனால் ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தை தான் நயன்தாரா மிஸ் செய்துவிட்டதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். அதுவும் குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் நயன்தாராவின் நடிக்க வைக்க மணிரத்தினம் திட்டமிட்டு இருந்தாராம் ஆனால் அது நடக்காமல் போன பிறகு தான் திரிஷா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் எனவும் கூறி வருகின்றனர்.