தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அண்ணாத்தா என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் நயன்தாரா அவர் நடித்த மூக்குத்தி அம்மன் என்ற இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை ஆர் ஜே பாலாஜி அவர்கள் இயக்குகிறார் மற்றும் இப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கூறியது நாகர்கோவில் அருகே சுற்றுலா சென்றபோது தற்செயலாக மூக்குத்தி அம்மன் கோயிலுக்கும் சென்றோம். அந்த கோயிலை பற்றி மேலும் விசாரித்த பொழுதுதான் ஐடியா கிடைத்தது அதை தான் கதையாக எடுக்க தோன்றுகிறது என அவர் கூறியுனார்.
மேலும் இப்படத்தின் கதையை நயன்தாரா அவர்களுடன் கூறுவதற்கு 5 மணிக்கு என்னை அழைத்தார் ஆனால் அவர் வீட்டிற்கு 7:00 மணிக்கு சென்று கதையை கூறினேன். அடுத்த 7:30 மணிக்கு எல்லாம் கதை ஓகே என்று சொல்லிவிட்டார்.
அரை மணி நேரத்தில் கதையை ஓகே சொன்னது தனக்கு மிகுந்த சந்தோஷம் அளித்தது அவர் கதையை ஓகே சொல்லிவிட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது தனது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படித்தான் மூக்குத்தி அம்மன் படம் எடுக்க காரணமாக அமைந்தது என மேலும் தெரிவித்தார்.
இப்படத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்மிருதி வெங்கட் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளார் . இப்படத்திற்கு இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார் மற்றும் ஒளிப்பதிவாளராக தினேஷ் அவர்கள் பணியாற்றியுள்ளார் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் கூறி உள்ளார்.