தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் அண்மை காலமாக தமிழில் தான் பெரிதும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கையில் தற்பொழுது இறைவன், கனெக்ட், ஜவான் போன்ற ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இருக்கின்றன.
இந்த திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறும் பட்சத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என கூறப்படுகிறது இது இப்படி இருக்க தற்பொழுது ஒரு திரைப்படத்திற்காக 10 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது ஆம் இப்பொழுது முன்னணி நடிகர்கள் கூட 10, 20 கோடி தான் சம்பளம் வாங்குகிறார்கள்.
அவர்களுக்கு நிகராக இவர் வாங்குவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் தான் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஒரு வழியாக ஆறு வருடம் கழித்து ஜூன் 9ஆம் தேதி சினிமா பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது இருவரும் வாழ்க்கையை அனுபவித்து வாழுகின்றனர் மேலும் படங்களிலும் பணியாற்றி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக நீங்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்ற கிரீடத்தை பல வருடங்களாக தக்க வைத்து உள்ளீர்கள் இது உங்களுக்கு கிடைத்ததில் இருந்து நீங்கள் சினிமாவில் எப்படி ஓடுகிறீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் வெளிப்படையாக சொன்னது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். நான் வெற்றி பெற்று விட்டேன் என்ற எண்ணமோ, டைட்டிலுக்காகவோ நான் வேலை செய்வதில்லை என்னுடைய முதல் நாளில் நான் எப்படி பயந்து பயந்து வேலைக்கு வந்தேனோ ஷூட்டிங்கில் இருந்தேனோ அதே பயம் இன்றும் எனக்கு இருக்கிறது ஷூட்டிங் முடிந்துவிட்டு வீடு சென்ற பிறகு நான் செய்த வேலையை எனக்கு முழு திருப்தியாக இருக்கிறதா என்று மட்டும் தான் நான் பார்ப்பேன். கடந்த 18 வருடங்களாக நான் இதை மட்டும் தான் பாலோ செய்து வருகிறேன் என கூறினார்.