வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நயன்தாரா இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அந்த திரைப்படத்திற்காக இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.
அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு ரஜினியுடன் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் இவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
மேலும் இவர் தற்போது இவரது காதலனான விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து ஒரு விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவர் எனது நடிப்பு ஒரு நடிகருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்திற்காக விருது வாங்கிய போது எனது நடிப்பு அந்த திரைப்படத்தில் தனுஷ்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை அதனால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
தற்போது இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.