தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் சிம்பு. இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும்.. அவ்வபோது கிசுகிசுவில் சிக்குவது வழக்கம் அப்படி நயன்தாராவுடன் இவர் பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டார் இவர்கள் இருவரும் இணைந்து வல்லவன் திரைப்படத்தில் நடிக்கும் போது நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி கிசுகிசுக்கப்பட்டது.
இது பற்றி நயன்தாரா, சிம்புவிடம் பல மேடைகளில் பல பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே கேட்டுள்ளனர் ஆனால் இதுவரை இருவரும் தெளிவான விளக்கம் கொடுக்காமல் ஏதாவது ஒன்றை சொல்லி மழுப்பி விடுவார்கள். ஆனால் உண்மையில் வல்லவன் படத்தில் இருவரும் நெருக்கமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காதல் பண்ணினார்கள் என பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து இது நம்ம ஆளு திரைப்படத்தில் நடித்தனர் அப்பொழுதும் சிம்பு மற்றும் நயன்தாரா பண்ணிய லூட்டியை பற்றி அந்த படத்தை தயாரித்தேன் தேனப்பன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார் அதில் அவர் சொன்னது.. தயாரிப்பாளர் தேனப்பன் யாரிடமும் போனை கொடுக்கவே மாட்டாராம்.
ஆனால் நயன்தாரா நெருங்கிய நண்பர் என்பதால் ஒருநாள் இரவு தயாரிப்பாளர் தேனப்பன் போனை நயன்தாரா கேட்டுள்ளார் அவர் அன்று இரவு தனது போனை கொடுத்துள்ளார். உடனே நயன்தாராவும், சிம்புவும் சேர்ந்து ஐ லவ் யூ என டைப் செய்து நடிகை கோபிகாவுக்கு மெசேஜ் பண்ணி உள்ளனர். பிறகு அந்த குறுஞ் செய்தியை டெலிட் செய்துள்ளனர். மறுநாள் கோபிகா தயாரிப்பாளர் தேனப்பன்னிடம் வந்து ஏன் சார் அப்படி மெசேஜ் பண்ணுனீங்க என கேட்டுள்ளார்.
சத்தியமா நான் அப்படி மெசேஜ் பண்ணல என சொல்லி யோசிக்க ஆரம்பித்தார். சிம்புவும், நயன்தாராவும் தான் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார் என தெரிய வந்ததாம்.. இந்த மாதிரி நயன்தாரா அடிக்கடி சேட்டை செய்யக்கூடியவராகத் தான் இருந்தார் என தேனப்பன் அந்த பேட்டியில் கூறி முடித்தார்.