வாவ்.. சூப்பர்.. புருஷனுக்கு மெசேஜ் அனுப்பிய நயன்தாரா – தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன்.!

nayanthara-
nayanthara-

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் இவர் சினிமா உலகில் பல வெற்றிகளை கண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல தடங்கல்களை மட்டுமே சந்தித்தார் இதிலிருந்து அவர் மாற மிக உதவிகரமாக இருந்தவர்தான் விக்னேஷ் சிவன்.

முதலில் இருவரும் நண்பர்களாக பழகி பின் காதலர்களாக மாறி ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கேரளா தாய்லாந்து போன்ற இடங்களுக்கு சுற்றித்திரிந்தனர். இருப்பினும் படங்கள் நிறைய இருந்ததால் வேறு வழி இன்றி சினிமாவில் பயணிக்க தொடங்கியது இந்த ஜோடி.

லேடி சூப்பரா நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்  . விக்னேஷ் சிவனோ நடிகர் அஜித்தின் 62 படத்தை இயக்க  இப்பொழுது கதைகளை விறுவிறுப்பாக ரெடி செய்து வருகிறார். இதற்கு இடையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியா  தொடக்க விழாவை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பிரமாதமாக இருந்ததால் விக்னேஷ் சிவனை ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தொடக்க விழாவை பார்த்துவிட்டு நயன்தாராவும் மெசேஜ் செய்து இருந்தார் மேலும் என்ன சொன்னார் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார் விக்னேஷ் சிவன்.

முதலில் இந்த நிகழ்ச்சி எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என நினைத்தேன். சிறப்பாக நடந்து முடிந்தது நிகழ்ச்சி முடிந்த உடனேயே நயன்தாரா முதலில் மெசேஜ் செய்திருந்தார். வாவ் ஆச்சரியமாகவும், நிகழ்ச்சி மிக  பிரம்மாண்டமாகவும் இருந்தது என கூறினார். நயன்தாராவே விக்னேஷ் சிவனை வாழ்த்தியதால் விக்னேஷ் சிவன் அளவற்ற சந்தோஷத்தில் அப்பொழுது இருந்தாராம்.