தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா ஆவார்.தற்பொழுத உள்ள நடிகர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தவராக உள்ளார். அதுமட்டுமல்லாமல் பல பெண்களின் ரோல்மாடலாக திகழ்கிறார். இந்த நிலையில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்பொழுது நயன்தாராவை பற்றி அறியாத பலசெய்திளை காண்போம்.
1.நடிகர்களின் ஆதிக்கம் மிகுந்த தமிழ் சினிமாவில் தனக்கு எதிரான தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து தனி ஒருத்தியாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பது குறிப்பிடத்தக்கது.
2.நடிக்க ஆரம்பித்த காலத்தில் இந்த பொண்ணுக்கு கண்ணு ஒரு மாதிரி இருக்கு என்று சொல்லி பலராலும் நிராகரிக்கப்பட்டது இன்று தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் முதல் கண்ணாக மாறி இருக்கிறார்.
3.இவர் கேரளாவில் கிறிஸ்துவ மதத்தில் பிறந்திருந்தாலும் இந்து மதத்தின் மீதான பற்றால் இந்து மதத்திற்கு மாறினார்.
4.மனிதாபிமானத்திற்கு, மனித நேயத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித் என்பது நாம் அனைவருக்கும் தெரியும் அதற்கு நிகரானவர்தான் நடிகை நயன்தாரா.
5.வில்லு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது இவருடைய பணியாற்றிய டெக்னீசியன் ஒருவருக்கு நெஞ்சு வலியால் துடித்ததால் அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து அந்த சிகிச்சைக்கான முழு பணத்தையும் தானே கட்டிய அவரின் உயிரை காப்பாற்றினார் நடிகை நயன்தாரா.
6.தனக்கு எப்போதும் உதவியாக இருந்த அழகுபடுத்தும் மேக்கப் மேனுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எதிரில் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் கோடிகளில் மதிப்புடைய ஒரு பிளாட்டை தன் சொந்த செலவில் இலவசமாய் வாங்கி கொடுத்தார் நடிகை நயன்தாரா.
7.அன்பிற்கும், நட்பிற்கும் நயன்தாரா என்றுமே அடிமைதான் அந்த வகையில் ஷாருக்கான் படத்தில் ஒரு படத்தில் நடனமாட அழித்தார் ஆனால் சற்றும் யோசிக்காமல் வேண்டாம் என கூறிவிட்டு தனுஷ் எதிர்நீச்சல் படத்தில் நடனமாட அழைப்பதால் தனுஷ் நட்பிற்காக நடனமான சென்றார்.
8.பெண்களை மெழுகு பொருளாக மட்டுமே கொண்டிருந்த தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி நல்ல கதையை தேர்ந்தெடுத்து ஒரு புதுமை படைத்தார் நடிகை நயன்தாரா.
9.பெரிய சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே காட்டப்படும் ஸ்பெஷல் ஷோ காட்சி நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்பட மூவி ஹீரோயினி நடித்து அதிகாலை காட்சி திரையிடப்பட்ட முதல் படமாகும் இந்த சாதனையை இதுவரை வேறு எந்த ஹீரோயினும் செய்யவில்லை என்பதை நயன்தாராவிற்கு மட்டுமே கிடைத்த பெருமை.
10.இவர் ஒரு தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியை மாறாக பயன்படுத்தி வேறு விதமாக சித்தரித்ததால் இனிமேல் நான் எந்த ஒரு ஊடகத்தையும் பயன்படுத்த மாட்டேன் என அஜித்தைப் போலவே ஊடகங்களில் இருந்து எப்போதும் விலகியே இருக்க விரும்புவார் நயன்தாரா.
11.கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் 1984ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் பெங்களூரில் பிறந்தார் இவருடைய பெற்றோர் குரியன், ஓமன குரியன் அவர்கள் இவருடைய தந்தை குரியன் விமானத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியர்களுக்கு முதலில் லினோ என்ற ஆண் குழந்தை பிறந்தது அதன்பிறகுதான் நயன்தாரா பிறந்தார்.
12.இவர் 2003ஆம் ஆண்டில் மனசினக்கரே என்கின்ற மலையாள படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தான் ஐயா என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
13.அதன்பிறகு இவர் நடித்த வல்லவன் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த சிம்புவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு சில ஆண்டுகள் எவ்வளவு தூரம் சென்றது என்பது யாருக்குமே தெரியாத நிலையில் முறிவு ஏற்பட்டது.
14.வில்லு படத்தில் நயன்தாராவும் பிரபுதேவாவும் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் நட்பாக ஆரம்பித்து அதன் பிறகு காதலாக மாறியது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் பொழுது பிரபுதேவாவின் முதல் மனைவி திருமதி லதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு உண்ணாவிரதம் இருக்கவும் முயற்சித்தார் அதோடு சில பெண்கள் அமைப்பும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக நயன்தாரா நடப்பதாக கூறி கொடி பிடிக்கவே இறுதியில் பிரபுதேவாவுடன் தொடர்பை முறித்துக் கொண்டதாக நயன்தாரா அறிவித்தார்.
15.அதன் பிறகு தன் காதலுக்காக பல ஆண்டுகள் திரைப்படத்துறையை விட்டு விலகியிருந்தாலும் திரும்பி வரும்போதெல்லாம் விட்ட இடத்திலிருந்தே ஆரம்பிக்கும் சக்தி மிகுந்த ஆளுமையாக இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் சுமார் 60ககும் மேற்பட்ட படங்களில் நடித்து கலைமாமணி விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது, சிறந்த நடிகை தமிழ்நாடு அரசு விருது என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
16.இந்த நிலையில் ஆணுக்கு பெண் நிகர் என தென்னிந்திய சினிமாவில் நிரூபித்து காட்டிய வீர பெண்மணி நயன்தாரா விக்னேஸ்வரனுடன் ஏற்பட்ட காதலாவுது வெற்றி பெறும் என வாழ்த்துவோம்.