மலையாள நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமா உலகில் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது. அதுவும் டாப் ஹீரோக்கள் படங்கள் என்பதால் இவரது மார்க்கெட்டும் ஒவ்வொரு படத்திற்கும் எகிறி கொண்டே இருந்தது இதுவரை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களுடன் மட்டுமே நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
திரை உலகில் வெற்றியை மட்டுமே கண்டு ஓடிக்கொண்டிருந்த இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார் இந்த ஜோடி ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உறவினர்கள் நண்பர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரது முன்னிலையிலும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு சினிமா வாழ்க்கை என இரண்டையும் சூப்பராக வாழ்ந்து வருகின்றன. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றையும் சரியாக பிளான் போட்டு நடித்துவிட்டு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அடிக்கடி வெளிநாடு பக்கமும் போய்விடுகின்றனர்.
அப்படி அண்மையில் ஸ்பெயின் நாட்டிற்கு இந்த ஜோடி போனது தொடர்ந்து அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகின.. இந்த ஜோடி சினிமா வாழ்க்கை என இரண்டையும் அனுபவித்து வந்தாலும் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருந்ததாக இணையதள பக்கத்தில் அடிக்கடி தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் பரிசுத்த மருத்துவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமம் இல்லை இருந்தாலும் ஒரு 9 காலத்திற்கு நீங்கள் ஓய்வில் இருந்தால் வாய்ப்பு அதிகம் என்று கூறியதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறினார் மேலும் அவரை தேடி பல பட வாய்ப்புகள் வருகிறது எனவும் அதை ஒரு வித காரணங்கள் சொல்லி தவிர்ந்து வருகிறார் என்றும் பயில்வான் தெரிவித்துள்ளார்.