தமிழ் சினிமாவை பொருத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் பல நடிகைகள் சான்ஸ் கிடைத்தால் போதும் என யாருடன் வேணாலும் நடிக்க சம்மதிப்பார்கள் அதுவே ஒரு லெவலை அடைந்து விட்டால் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்பார்கள் இரண்டாம் கட்ட நடிகரோ அல்லது அறிமுக நடிகர்களோ என யாருடனும் நடிக்க மாட்டார்கள். இதற்கு பல நடிகைகளை எடுத்துக்காட்டாக கூறலாம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜவுளி கடையை திறந்து வைத்து முன்னணி தொழிலதிபராக உயர்ந்த நிற்பவர் சரவணன் அண்ணாச்சி லேஜன்ட் தற்பொழுது சரவணா ஸ்டோர் கடையை சரவணன் அருள் அதிபராக தற்பொழுது நடத்தி வருகிறார். முதலில்சரவணா ஸ்டோர் அருள் தன்னுடைய கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளை வைத்து விளம்பரத்தை எடுத்தார் அதுவே போகப் போக அந்த விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் தானும் நடிக்க ஆரம்பித்தார் இதுதான் அவரின் திரை பயணம்.
இப்படி தன்னுடைய கடை விளம்பரங்களில் லெஜெண்ட் சரவணா நடிக்க ஆரம்பித்து முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஒரு முழு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் அந்த திரைப்படம் தான் தி லெஜன்ட் இந்த திரைப்படத்தின் மூலம் தான் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை ott இணையதளத்தில் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தை Ott இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் இந்த திரைப்படம் வெளியாகி டாப் இடத்தினை தற்போது பிடித்துள்ளது இந்த திரைப்படத்தை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர் ஆன ஜேடி ஜெர்ரி இவர்கள் சமீபத்தில் நயன்தாரா பற்றி சில ரகசியமான தகவலை கூறியுள்ளார்கள். இந்த லெஜண்ட் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கதாநாயகியாக மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்தில் ஆவது நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார்கள். ஆனால் நயன்தாரா சரவணன் லெஜன்ட் அவர்களுடன் நடித்தால் தன்னுடைய மார்க்கெட் காலியாகிவிடும் என நினைத்துக் கொண்டு இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் இதனை வெளிப்படையாகவும் இரட்டை இயக்குனரான ஜெடி ஜெர்ரி அவர்களிடம் கூறியுள்ளார் இதைக் கேட்ட நயன்தாரா ரசிகர்கள் நல்லவேளை அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.