தம்முடைய முன்னாள் காதலரால் ஷாருக்கான் படத்தை இழந்த நயன்தாரா.! பிரச்சனை இப்படி சுழற்றி சுழற்றி அடிச்சுருக்கே..

nayanthara-sharukhan

தமிழ் சினிமாவில் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, இவர் ஆரம்ப காலத்தில் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார், என்னதான் இன்று உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் ஆரம்பத்தில் இவர் பல சர்ச்சைகளையும் அவமானங்களையும் தாண்டி தான் இந்த நிலையை அடைந்துள்ளார்.

நடிகை நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், இவர் கடந்து வந்த பாதைகளில் பல சறுக்கல் களையும் கஷ்டங்களையும் அவர் மட்டுமே அடைந்துள்ளார், அதிலும் சிம்பு ,பிரபுதேவா, விக்னேஷ் சிவன் என சில பிரபலங்கள் இவரின் காதல் வரிசையில் இருந்தார்கள். இதில் பிரபுதேவா திருமணமானவர் என்று தெரிந்தும் நயன்தாராவை மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்து பின்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இடம் தஞ்சம் அடைந்துள்ளார், இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள், இவர்கள் திருமணம் செய்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா ஷாருக்கான் திரைப்படத்தை மறுத்துள்ளார் என்பது வைரலாக பரவி வருகிறது, அந்த காலகட்டத்தில் ஷாருக்கான் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் ஆனால் நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம், அது வேற எந்த திரைப்படமும் இல்லை சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் தான்.

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் தான் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைத்தது, ஆனால் அந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு பிரபு தேவா தான் கோரியோகிராபர் என்பதால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டார், ஏனென்றால் அப்பொழுது பிரபுதேவாவுடன் காதல் முறிவில் நயன்தாரா இருந்தாராம் அதன் பிறகுதான் நயன்தாரா கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து படம் வெளியாகியது.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வந்தாலும் திருமணத்திற்கு இன்னும் இருவருமே தலை சாய்க்க வில்லை, திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்பு குறையும் என்பதால் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நயன்தாரா கூறியுள்ளாராம்.