என்னோட மொத்த இமேஜும் டேமேஜ் ஆகிடும்.! ஆல விடுங்க என தேசியவிருது திரைபடத்தை உதறித்தள்ளிய நயன்தாரா.!

nayanthara

Nyanthara famous hindi movie remake reject : நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தற்போது இவர் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், அதேபோல் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா ஒரு பட வாய்ப்பை வேண்டாம் என தூக்கி எறிந்த ஒரு திரைப்படம் இருக்கிறது.

ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே, ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அந்தாதுன் இந்த திரைப்படம் ஒரு ஹிந்தி திரைப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது அதுமட்டுமில்லாமல் தேசிய விருதும் கிடைத்தது. அப்படி இருக்கும் வகையில் அந்த அந்தாதுன் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின் நடிக்கிறார், அதேபோல் ஆயுஷ்மான் குரானாவின் கதாபாத்திரத்திற்கு இணையான கதாபாத்திரம் தான் தபுவின் கதாபாத்திரம், அந்த திரைப்படத்தில் கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தபு நடித்த அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க அணுகியுள்ளார் ஆனால் அந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா நாலு கோடி சம்பளமாக கேட்டதாலும் ஆனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தால் என்னுடைய இமேஜ் சுத்தமாக டேமேஜ் ஆகிவிடும் என்று கூறி அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் நயன்தாராவுக்கு முன்பு தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, இலியானா ஆகியோருடன்  பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் அந்த நடிகைகளும் தபுவின் கதாபாத்திரம் வில்லங்கமானது என விலகிக் கொண்டார்களாம்.

vishal nayanthara
vishal nayanthara

இப்படி இருக்கும் வகையில் ரம்யா கிருஷ்ணன் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று மிகவும் தைரியமாக நடிக்கக் கூடியவர் அவர் எப்படி இந்த கதாபாத்திரத்தை மறுத்தார் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் ரம்யாகிருஷ்ணன் கமல் நடித்த பஞ்சதந்திரம் திரை படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார், அந்த கதாபாத்திரத்தில் துணிந்து நடித்த ரம்யா கிருஷ்ணன் எதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்க மறுத்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது ஆனால் கொரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதேபோல் அந்தாதுன் தெலுங்கு ரீமேக் உரிமையை நிதின் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரேஷ் மூவிஸ் மூலம் 3.5 கோடிக்கு வாங்கியுள்ளார் படத்தின் ரீமேக் உரிமையை.

அதேபோல் இந்த திரைப்படத்தை தமிழில் நடிகர் பிரசாந்தை வைத்து ரீமேக் செய்ய இருக்கிறார்கள், தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற ஆவல் பலரிடம் இருக்கிறது, இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரசாந்த் தனது உடல் எடையை குறைத்து வருகிறார், நீண்டகாலமாக ஹிட்  கொடுக்க முடியாமல் தவித்து வரும் பிரசாந்த் இந்த திரைப்படத்தில் நடித்தால் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என கூறப்படுகிறது.