தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன்பிறகு சில பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகினார். நீண்ட காலம் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த நயன்தாரா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தமிழில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையும் இவர்தான்.
தற்பொழுது நயன்தாராவை ஒரு படத்தில் கமிட் செய்வதற்கு பல கோடிகள் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள் இந்த நிலையில் தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் சமந்தா, விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது திரைக்கு வந்துள்ளது.
காற்று வாக்கில் இரண்டு காதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அதனால் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் நயன்தாரா தற்போது தனது கைவசம் காட்பாதர், கனெக்ட் ஆற்றல் அட்லீயிடம் ஒரு படம் என மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
அந்தவகையில் நயன்தாரா தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் நடிப்பின் மூலம் இதுவரை சுமார் 60 70 கோடி வரை சொத்து குவித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று இதுவரை தெரியவில்லை ஆனால் சினிமா பிரபலங்கள் பலரும் பெரிதாக பேசி வருவது இந்த தகவல் தான்.