பட வாய்ப்பு வேண்டுமா படுக்கைக்கு வா..? நயன்தாராவை ஸ்கெட்ச் போட்டு அழைத்த பிரபலம்.

nayanthara
nayanthara

சினிமாவைப் பொறுத்தவரை பட வாய்ப்பு வேண்டும் என்றால் நடிகைகளை தங்களுடைய ஆசைக்கு பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. ஆனால் சமீப காலமாக நடிகைகள் அதனை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா பட வாய்ப்புக்காக தன்னை படுகைக்கு அழைத்த ஒருவரை பேட்டியில் கூறி பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளார் இந்த தகவல் சமூக வலைதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணம் கடந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் திருமணம் நடந்த நான்கு  மாதத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவும் நாங்கள் அப்பா அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்கள்.

இவர்கள் வெளியிட்ட அறிவிப்பு சினிமா உலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் நான்கே மாதத்தில் எப்படி குழந்தை சாத்தியம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள் பின்பு அவர்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை உறுதி செய்தார்கள். தற்பொழுது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை நயன்தாராவும் கணவர் விக்னேஷ் சிவனும்  தனது இரண்டு மகன்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினார்கள்.

அதுமட்டுமில்லாமல் நயன்தாரா தன்னுடைய குடும்பத்துடன் பொங்கல் விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடினார் அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நயன்தாரா ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார் அப்பொழுது பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு ஒருவர் அழைத்தார் என்று செய்தியாளர் சந்திப்பில் மிகவும் போல்டாக பேசினர் நயன்தாரா.

நயன்தாரா கூறியதாவது என் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் தருகிறேன் ஆனால் அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என என்னிடம் ஒருவர் கூறினார் ஆனால் அதற்கு நான் முடியாது என்று மறுத்தேன் அதற்குக் காரணம் என் திறமையின் மீது உள்ள நம்பிக்கைதான் என்னுடைய திறமைக்காக மட்டும் தான் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் நம்பினேன் இந்த நிலையில் தற்பொழுது இந்த செய்தி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரசிகர்கள் பலரும் அந்த நபர் யார் என்று தேடி அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.