சினிமாவுக்கு ஒரேடியாக முழுக்கு போடும் நயன்தாரா.. இந்த 2 பேர் தான் முக்கிய காரணமாம்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தகவல்

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக பார்க்கப்படுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தனது திரை பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரையிலுமே டாப் நடிகர்களுடன் நடிப்பதை மட்டுமே ஒரு கொள்கையாக வைத்து இருக்கிறார். அவ்வப்போது சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் என்னவோ இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.  தற்பொழுது கூட நடிகை நயன்தாரா கையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின்னாக  நடித்து வருகிறார் இது தவிர நயன்தாரா 75  மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களில் அவர் கமிட்டாகி உள்ளார்.

இப்படி திரை உலகில் வெற்றியை கண்டு வரும் நயன்தாரா நிஜ வாழ்க்கையில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. சினிமாவில் தொடர்ந்து ஓடினாலும் குழந்தைகளை நல்ல முறையில் பார்த்து வருகிறார்.

இருந்தாலும் குடும்ப சுமை நாளுக்கு நாள் அதிகமாகுவதால் வேறு வழி இல்லாமல் அவர் ஒரு புதிய முடிவை எடுத்து இருக்கிறார் அதாவது நயன்தாரா இருக்கின்ற ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்துவிட்டு பிறகு தனது  குடும்பத்தை பார்த்துக் கொள்ள அதிகம் ஆர்வம் காட்ட இருக்கிறாராம்.

குறிப்பாக தனது இரண்டு குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்க்க அவர் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை நயன்தாரா வாய் திருந்தால் மட்டுமே உறுதியாக சொல்லப்பட முடியும். இருப்பினும் தற்பொழுது இந்த தகவல் காட்டு தீ போல பரவி வருகிறது.