தமிழ் சினிமாவின் மூலம் திரையுலகில் பிரபலமடைந்து தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. தற்பொழுது இவர் பிரபல இறைச்சி நிறுவனத்தின் பிராண்டு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா நடிப்பையும் தாண்டி தொடர்ந்த தொழில்களை செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சில நிறுவனங்களில் பங்குதாரராக இவர் இருந்து வருகிறார். அந்த வகையில் முக்கியமாக இவருடைய கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தியவர் இதன் மூலம் பல்வேறு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் விக்னேஷ் சிவன் மற்றும் இவருடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் நடிப்பதை தொடர்ந்து உள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது நடிகை நயன்தாரா ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் காட்பாதர் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் கதாநாயகனாக சிரஞ்சீவி நடித்துள்ளார். இவ்வாறு பிசியாக தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா தற்பொழுது பிரபல நிறுவனத்தின் பிராண்டு தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஃபிபோலா-வின் பிராண்ட் தூதுவாராக நயன்தாரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவே இந்நிறுவனத்திற்காக அவர் நடித்த விளம்பரங்கள் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தென் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் இந்த ஃபிபோலா நிறுவனத்தில் பிராண்ட் தூதுவரானாதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள நயன்தாரா இந்த பிராண்டுடன் நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். நடிகை நயன்தாரா மிகப்பெரிய அசைவ விரும்பி என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் குறிப்பாக கடல் உணவுகள் அவருக்கு மிகவும் பிடிக்கும் எனவே இந்த நிறுவனத்துடன் அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.