தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் இப்பொழுது டாப் நடிகருடன் நடிப்பது மற்றும் சோலோ படங்களில் நடித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறார்.
இப்பொழுது கூட நயன்தாரா கனெக்ட், கோல்ட், ஜவான் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இது இப்படி இருக்க நிஜ வாழ்க்கையில் விக்னேஷ் சிவனை ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் பலரின் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடி திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து மற்றும் கேரளா திருப்பதியென சுற்றி திரிந்தது அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. இப்பொழுது திடீரென படபிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு தற்பொழுது ஒரு சின்ன ட்ரிப்புக்கு போய் உள்ளனர்.
அதனால் ஸ்பெயின் நாட்டில் இருந்து திரும்ப வந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியவர்கள் எகே 62 படத்தில் இணைவார்கள் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஸ்பெயின் நாட்டில் இவர்கள் ரொமான்ஸ் பண்ணும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மாடர்ன் டிரஸ்ஸில் செம்ம நச்சென்று விளக்குக்கு பக்கத்துல உக்கர்ந்து இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இளசுகளை வர்ணிக்க வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை..