OTT யில் ரிலீஸாகும் நயன்தாராவின் திரைப்படம்.!

nayanthara-new-movie-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா.  இவரின் கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் தற்பொழுது புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.  இந்நிலையில் இவர் நடித்துள்ள ஒரு திரைப்படம் ஓடிடி வழியாக வெளியாகவுள்ளது.

கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் முன்பு அனைத்து திரைப்படங்களும் ஓடிடி வழியாகத் தான் வெளியானது. அதன்பிறகு கொரோனா தாக்கம் ஓரளவிற்கு குறைந்ததால் முன்னணி நடிகர்களின் திரைப்படமான மாஸ்டர், சுல்தான், கர்ணன் உள்ளிட்ட இன்னும் சில படங்கள்  தியேட்டரில் வெளியானது.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரானாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தியேட்டர்கள் மூடப்படும் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடி வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு நயன்தாரா நடைபெற இருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தான் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

நயன்தாரா நெற்றிக்கண் திரைப்படத்தில் கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார்.  இந்நிலையில் இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சமீபத்தில் ஆரம்பித்து இருந்தார்கள். அந்த வகையில் இந்நிறுவனத்தின் முதல் படம் தான் நெற்றிக்கண் திரைப்படம்.

nayanthara new movie
nayanthara new movie

நெற்றிக்கண் திரைப்படத்தை மிலிந்த ராவ் இயக்கியுள்ளார். மேலும் கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்ய கிருஷ் பாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள தான் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அதோடு இயக்குனர் மற்றும் தனது காதலரான விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்க வைத்துள்ளார் நயன்தாரா.