தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா முதன் முறையாக 44 வயது நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் மீது சினிமாவில் பல சர்ச்சைகள் இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் சினிமாவில் எப்பொழுதும் அனைத்து விஷயங்களிலும் உச்சத்தில் இருந்து வருகிறார்.
எடுத்துக்காட்டாக தற்போது தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான். அந்தவகையில் 6 கோடி முதல் 7 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். முன்பெல்லாம் கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீப காலங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படத்தில் கண்தெரியாத பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் நடிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடி வழியாக வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிவுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா மேலும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, தெலுங்கில் அளவைகுண்டபுரம்லோ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய திரி விக்ரம் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார்.
இவர் நடிக்க உள்ள இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளாம் அதில் ஒரு நடிகையாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கு நயன்தாரா ஒப்புக் கொண்டால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் கூறியுள்ளார்கள்.
தற்பொழுது நயன்தாரா மற்ற மொழிகளில் பெரும்பாலும் நடிப்பதை தவிர்த்து வருகிறார. அதோடு இத்திரைப்படத்தில் இவர் ஒப்புக் கொண்டால் இதுதான் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படமாகும்.