பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்பவே ஆரம்பித்த நயன்தாரா -லைக்குகளை அள்ளும் ரொமான்டிக் புகைப்படம் இதோ..

nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது சினிமா பயணத்தை தொடர்ந்திலிருந்து இப்பொழுது வரையிலுமே அஜித், விஜய், சூர்யா சிவகார்த்திகேயன், ரஜினி, தனுஷ், ஆர்யா, சரத்குமார் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார்.

இதனால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி எட்டியது இப்படி  ஓடிக்கொண்டிருந்த இவர் நிஜ வாழ்க்கையில் மட்டும் தொடர்ந்தது பிரச்சனை மற்றும் சர்ச்சைகளில் சிக்கித் தவித்தார். இந்த நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவன்னுடன் நல்ல பழக்கம் ஏற்பட பின் காதலாக மாறியது.

தொடர்ந்து இருவரும் ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் முன்னிலையிலும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு நயன்தாராவுக்கு நல்ல நேரம் அமைந்துவிட்டது.

பட வாய்ப்புகள் ஏராளமாக குவிய மறுபக்கம் தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 38வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் அதற்கு இன்னும் சில நாட்களில் இருக்கின்ற நிலையில் இப்பொழுது கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டார் என கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒயிட் அண்ட் ஒயிட் ட்ரெஸ்ஸில் சும்மா கட்டிப்பிடித்து தழுவிய புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்டுகளை அள்ளி வீசுகின்றனர். மேலும் லைக்குகளையும் கொடுத்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுத்துக் கொண்ட அந்த க்யூட் புகைப்படத்தை..

nayanthara
nayanthara
nayanthara