ஜோடி சேர்ந்ததும் போதும் அடிச்சி தூக்குராங்களே.! நயன்தாரா விக்கிக்கு அடித்த ஜாக்பாட்

nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக ஓடிடி வழியாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து  தற்போது இவர் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அவள் திரைப்படத்தை இயக்கிய மலிந்த ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் உடைய இத்திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ்  தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து  கார்த்தி கணேஷ் ஒளிப்பதிவு செய்ய இத்திரைப்படத்திற்கு கிரிஷ்  கோபாலச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அந்தவகையில் இத்திரைப்படம் ஜூலை 9-ஆம் தேதி ஓடிடி வழியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் எவ்வளவுக்கு விலைபோயி உள்ளது என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

netrikan
netrikan

இத்திரைப்படத்தில் நயன்தாராவின் சம்பளத்தை தவிர்த்து இத்திரைப்படத்தின்  மொத்த பட்ஜெட் 5 கோடி தற்பொழுது இத்திரைப்படம் 25 கோடிக்கு விலை போயுள்ளது. அந்த வகையில் பார்த்தால் 20 கோடி லாபத்தை சந்தித்துள்ளது.

இத்திரைப்படத்தில் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடித்துதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. அதோட இத்திரைப்படம் கதாநாயகிக்கு  முக்கியத்துவம் தரும் திரைப்படமாகும்.