தென்னிந்திய சினிமாவில் தற்போது ட்ரென்டிங்கானா காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போன்ற பிரபல ஜோடிகலுக்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தான் ரசிகர்களின் பேவரைட் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் தற்போது நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மெலிந்த ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் நெற்றிக்கண். இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார். அதோடு இத்திரைப்படம் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாகும்.
நயன்தாராவை தொடர்ந்து இத்திரைப்படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசை அமைத்துள்ளார். அதோடு இத்திரைப்படம் கொரியன் திரைப்படமான ப்ளைண்ட் என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் கொரோனாவின் முதலாவது அலையின் பொழுது தொடங்கப்பட்டது அதன் பிறகு சிறிது காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனாவின் இரண்டாவது அலையில் தான் மிகவும் வேகமாக பரபரப்பாக நடத்தி திரைப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளார்கள்.
இந்நிலையில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறி இருந்தார்கள். ஆனால் தற்பொழுது கொரோனாவின் பரவல் அதிகமாக இருப்பதால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது எனவே ஓடிடி வழியாக வெளியாக உள்ளது.
அந்த வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற தகவலை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதாவது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இதுவும் கடந்து போகும் என்ற பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளதாம்.