90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தவர் தான் சுந்தர் சி. இவரின் நடிப்புத் திறமையினால் அந்தக் காலகட்டத்தில் இவருக்கு டிமண்ட் அதிகமாக இருந்து வந்தது. அந்தவகையில் தொடர்ந்தும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா பட வில்லன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. பொதுவாக நடிகர் சுந்தர் சி திரைப்படங்கள் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் உடையவர் மிகவும் விறுவிறுப்பாகவும் நிறைந்த திரைப்படமாகவும் அமையும்.
இவர் சமீபத்தில் நடித்து வரும் இந்த திரைப்படத்தினை நடிகை திரிஷா நடித்திருந்த பரமபத விளையாட்டு படத்தினை இயக்கிய திருஞானம் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக ராகினி திரிவேதி நடித்து வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இவர் நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்த இமைக்கா நொடி திரைப்படத்தில் சிறந்த வில்லனாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் இவரும் சிறந்த நடிப்பு திறமை ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது.
நடிகர் சுந்தர் சி தலைநகரம் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அத்திரைப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் அம்ரிதா ஐயர்,ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா என பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிலிருந்து அடித்து வருகிறார்கள் இத்திரைப்படத்தினை சுந்தர் சி தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.