நயன்தாரா நடித்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகும் அனுஷ்கா..! ஒருமுறை பல்ப் வாங்கினது போதாது போல..!

nayanthara-vs-anushka
nayanthara-vs-anushka

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது கதாநாயகன் உள்ள திரை படங்களில் நடிப்பதைக் காட்டிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்திலேயே பெருமளவில் நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.

அப்படி நயன்தாரா நடித்த திரைப்படங்கள் தான் டோரா, மூக்குத்தி அம்மன், அறம், மாயா, தற்போது நெற்றிக்கண் ஆகிய அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது இந்நிலையில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் ஆர்வம் காட்டி வரும் நயன்தாரா அங்கும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படமானது இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது கொரியன் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா தான் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். அந்த வகையில் சமீபத்தில் கூட சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா வாய் பேச முடியாத காது கேட்க  முடியாத பெண்ணாக நடித்து இருப்பார் அது ரசிகர்களிடையே பல எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்தாலும் தற்போது கண் தெரியாத ஒரு பெண்ணாக நடிக்க உள்ளார்.

ஆனால் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை என்ற செய்தி அனுஷ்காவிற்கு தெரிந்தால் என்ன செய்வார் என்று தெரியவில்லை. போகிற போக்கை பார்த்தால் இந்த திரைப்படம் வெளியாகுமா ஆகாதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

anushka-1
anushka-1