100 கோடி வசூல் செய்த படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்ட 35 வயது நடிகை

nayanthara

Nayanthara : தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோக்களுடன் நடிப்பது அல்லது பெண்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் இவருடைய மார்க்கெட் குறையாமல் இருக்கிறது.

அதனாலயே தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா இருக்கிறார் இப்படிப்பட்ட நயன்தாரா கைவசம் இறைவன், நயன்தாரா 75, டெஸ்ட், ஜவான் போன்ற படங்கள் இருக்கின்றன இதில் பெரிதும் ஜவான் படத்தையே எதிர்நோக்கி இருக்கின்றனர் ஏனென்றால் ஹிந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் இப்படி வெற்றி நடிகையாக ஓடும்  இவர் மறுபக்கம் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வாழ்க்கையையும் ஒரு பக்கம் என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார் இப்படி இரண்டிலும் பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாரா சமீபகாலமாக ஒரு சில நல்ல படங்களை தவற விட்டுள்ளார்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் இந்த படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருந்தார் அந்த கதாபாத்திரத்தில் முதலில் தேர்வானது நயன்தாரா தான் சில காரணங்களால் நயன்தாராவால் நடிக்க முடியாமல்..

nithiya menon
nithiya menon

போக பின் அந்த வாய்ப்பு நித்யா மேனனுக்கு போனதாக கூறப்படுகிறது. நித்யா மேனனும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பர் ஆக நடித்து நல்ல பெயரை பெற்றார். நயன்தாரா அந்த கதாபாத்திரத்தை  ஏற்று நடித்திருந்தால் மார்க்கெட் இன்னும் சற்று உயர்ந்திருக்கும் என பலரும் கூறுகின்றனர்.