Nayanthara lovely moments with her son uyir pic: நடிகை நயன்தாரா தனது மகனை தாலாட்டி தூங்க வைக்கும் அழகான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அப்படி கடைசியாக வெளியான ஜவான் படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். இதனை அடுத்து தொடர்ந்து தரமான கதை அம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா அதே போல் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சிறந்த மனைவியாகவும், தாயாகவும் இருப்பது ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது.
ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்திருந்த இறைவன் திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வரும் இவர் 9skin என்ற புதிய பிசினஸ் செய்யும் அறிவித்துள்ளார். அதற்கான ப்ரோமோஷனுக்காக வெளிநாட்டு நிகழ்ச்சியில் கலந்து வரும் நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய மகன்களின் முதலாண்டு பிறந்த நாளை கொண்டாடினார்.
தன்னுடைய கணவர் விக்னேஷ் மற்றும் மகன்களுடன் இருக்கும் வீடியோக்கள் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு வருகிறார். கடந்த ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என பெயர் வைத்திருக்கும் நிலையில் அதற்கான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில் தன்னுடைய மகன் உயிரை அவரது மடியில் நயன்தாரா போட்டு தாலாட்டு தூங்க வைக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக ரசிகர்களை பெரிதளவிடம் கவர்ந்துள்ளது. அதில் நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்தபடி தன்னுடைய குழந்தையை நயன்தாரா படுக்க வைத்து தூங்க வைக்கிறார். இந்த க்யூட்டான வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..