திருமணம் செய்ததால் சினிமா மார்க்கெட்டை இழந்த நயன்தாரா.? நம்பர் 1 இடத்தைப் பிடிக்க ரெடியான பிரபல நடிகை.!

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருவதால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார் தற்போது ஒரு படத்திற்கு 3 லிருந்து சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக கடந்த ஜூலை 9-ஆம் தேதி உறவினர்கள் நண்பர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் முன்பும் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்திற்கு ரஜினி தாலி எடுத்துக் கொடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் செய்து உள்ளதால் சில காலங்கள் சினிமாவில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது இதனால் அவரது இடம் சினிமாவில் பறி போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் அண்மைகாலமாக நடிகை பூஜா ஹெக்டே.

தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்ந்துள்ளார். தமிழில் தளபதி விஜய் உடன் கை கோர்த்து பீஸ்ட், தெலுங்கில் சிரஞ்சீவி உடன் ஆச்சார்யா, பிரபாஸ் உடன் ராதே ஷியாம் ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார் அதை தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தற்போது பட வாய்ப்புகளை அள்ளி குவிக்கிறார்கள் குறிப்பாக ஹிந்தியில் சல்மான் கானுடன் ஒரு படம், ரன்வீர் சிங் உடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

அப்படி இருப்பதால் அவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது தற்போது ஒரு திரைப்படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் பூஜா ஹெக்டே. நயன்தாரா இல்லாததால் பூஜா ஹெக்டேவுக்கு தற்பொழுது நல்ல யோகம் அடித்து உள்ளது என கூறப்படுகிறது மேலும் தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வருவதற்கான வாய்ப்பு பூஜாவுக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.