நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தில் இருந்து நயன்தாராவின் புகைப்படம் தற்போது வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கலக்கி வந்த நயன்தாரா முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார்.
சமீப காலங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இதன் மூலம் இவருடைய ரசிகர் பட்டாளமும் அதிகரித்து வந்த நிலையில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இவருடைய கணவர் விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட ஏராளமான முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
எதிர்பார்த்த அளப்பிற்கு இந்த படம் வெற்றியை பெறவில்லை எனவே இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை நயன்தாராவின் நடிப்பில் O2 திரைப்படம் வெளியானது இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில் பிறகு நயன்தாரா கனெக்ட், ஜவான், கோல்ட், காட்பாதர், இறைவன் என ஏராளமான திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தையும் பிறந்த நிலையில் பலரும் வாழ்த்துக்களுக்கு கூறி வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மாயா திரைப்படத்தின் இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணகுமார் தற்பொழுது கனெக்ட் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இரண்டாவது முறையாக நயன்தாரா அஸ்வின் கூட்டணியில் கனெக்ட் திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தில் அனுபம் கெர், சத்யராஜ், வினய், நஃபிசா உள்ளிட்ட ஏராளமானவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை விக்னேஷ் சிவனின் ரவடி பிரிக்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது
இவ்வாறு இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக வயதான தோற்றத்தில் நயன்தாரா இருப்பதை பார்த்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் வருகின்ற 22ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.