சினிமாவிலும் தொழிலிலும் கொடிகட்டி பறந்து வரும் நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு இவருடைய படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என இருக்கும் மவுஸ் குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக தவழ்ந்து வரும் நயன்தாரா சொந்தமாக அவரது காஸ்ட்மெடிக்ஸ் பிராண்டையும் நடத்திக் கொண்டிருக்கிறார் மேலும் பல தொழில்களை செய்து வருகிறார்.
தனது அழகினால் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தனித்துவமான அனைவரையும் கவரும் உடையில் கலந்து கொள்கிறார். அந்த வகையில் இவருடைய ஸ்டைலுக்கான ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.
இவ்வாறு நயன்தாரா இப்படி அழகாக இருப்பதற்கான காரணம் குறித்தும் தனது உணவு முறை குறித்தும் சமீபத்தில் கூறியுள்ளார். அதாவது நயன்தாரா டயட் என்பது பிடித்த எந்த உணவையும் உண்ணக்கூடாது என்று நினைத்தேன் ஆனால் அது அப்படி இல்லை என்பது போகப்போக மருத்துவரை பார்க்கும் பொழுது தெரிந்தது.
தற்போது வீட்டிலேயே சமைத்த உணவை சத்தானதாகவும் சுவையானதாகவும் சாப்பிடுகிறேன் எனக் கூறிய இவர் மேலும் ஜங்க் ஃபுட் உணவுகள் மீது ஏக்கம் வரவில்லை. தான் உணவை பார்க்கும் முறையை மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.