சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் மிகவும் நெருக்கமாக அணைத்தபடி நயன்தாரா.! யார் அது தெரியுமா.?

nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.இவர் தற்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த  உட்பட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரபலம் ஒருவர் நயன்தாராவை மிக இருக்கமாக கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என்று பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிகளை மாகாபா, பிரியங்கா போன்றோர் தற்போது  தொகுத்து வழங்கி வருகிறார்கள்.இவர்கள் இந்நிகழ்ச்சியில் காமெடி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.எனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளது.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் பிரகதி குருபிரசாத். இவரின் குரல் வளத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டார்.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்பொழுது உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் பாடலுக்கு பின்னணி பாடகியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மற்ற நடிகைகளைப் போலவே சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் பிரபல ஹோட்டல் ஒன்றில் நயன்தாராவை சந்தித்துள்ளார். அப்போழுது இருவரும் மிகவும் நெருக்கமாக கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nayanthara 02
nayanthara 02