Actress Nayanthara: ஜவான் படத்தினைப் பார்த்த பிறகு இயக்குனர் அட்லீ மீது நயன்தாரா செம கோவத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
ராஜா ராணி படத்தில் நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவருடைய முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்தது. முதல் படத்தின் வெற்றினை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக மூன்று ஹிட் திரைப்படங்களை தந்தார்.
இவ்வாறு தமிழனை தொடர்ந்து தற்பொழுது அட்லீ பாலிவுட்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியான நிலையில் கண்டிப்பாக இந்த படம் பாலிவுட்டில் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பாதையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.
இதனை அடுத்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திறந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜவான் படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஜவான் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நயன்தாரா அட்லீ மீது கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜவான் ஹிட்டடிக்கும் பட்சத்தில் ஹிந்தியில் பெரிய ரவுண்டு வரலாம் என்ற கணக்கில் நயன்தாரா இருந்தாராம். அட்லீ தனக்கு பெரிய நண்பர் என்பதால் இந்த படத்தில் தங்கக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என நம்பி இருக்கிறார்.
அப்படிதான் ஷூட்டிங்கிலும் அட்லீ காட்சிகளை எடுத்தாராம் ஆனால் தற்பொழுது ஜவான் படம் முழுமையாக ரெடியாகி இருக்கும் நிலையில் அதனை பார்த்த நயந்தாரா பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். அதாவது, நயன்தாராவுக்கு முக்கியத்துவம் உள்ள சில காட்சிகளை அனைத்தையும் அட்லீ எடிட் செய்துவிட்டாராம் எனவே இதற்காக நயன்தாரா கடுப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.