Nayanthara: நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக இருந்து வருகிறார் பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகர்களுக்கு தரும் பாதி சம்பளத்தை கூட நடிகைகளுக்கு தருவது கிடையாது. ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் நடிகைகளுக்கு குறைவான சம்பளத்தை தான் தந்து வருகின்றனர்.
இந்த சூழலில் தற்பொழுது நடிகர்கள் அளவிற்கு அதிக சம்பளத்தை நயன்தாரா பெற்று வருகிறார். தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து சமீபத்தில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கும் அறிமுகமாகி இருக்கும் இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக நயன்தாரா உள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார் அதேபோல் மற்ற மொழி முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம் போன்ற திரைப்படங்கள்தான் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்று தந்தது.
இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவருடைய நடிப்பை பாராட்டும் வகையில் சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். நயன்தாராவும் அவரின் கணவர் விக்னேஷ் சிவனும் ஜெட் விமானத்தை வைத்திருக்கும் நிலையில் தங்களுடைய தனிப்பட்ட பயணங்களுக்கும், தொழில் சார்ந்த வேலைகளுக்கும் அந்த ஜெட் விமானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாராவின் தனியார் ஜெட் விமானத்தின் உட்புறத்தின் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என கூறப்படும் நிலையில் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவிலும் நயன்தாரா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய திரைவுலகில் சொந்தமாக ஜெட் விமான வைத்திருக்கும் ஒரே நடிகை நயன்தாரா என்பதே குறிப்பிடத்தக்கது. அந்த ஜெட் விமானத்தின் மதிப்பு ரூபாய் 50 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.