திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கும் நயன்தாரா.! 20 கோடி நஷ்டமானதால் புலம்பும் லேடி சூப்பர் ஸ்டார்…

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்ரே சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தற்போது உள்ள முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, என என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் பல திரைப்படங்களில் கமிட்டாகி உள்ள நிலையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகை நயன்தாரா அவர்கள் தற்போது 20 கோடி நஷ்டம் அடைந்ததால் புலம்பி வருகிறாராம். திருமணத்திற்கு முன்பு சினிமா வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை நயன்தாரா.

அந்த வகையில் திருமணம் முடிந்தவுடன் இரண்டு குழந்தைக்கு தாயானதை புகைப்படமாக வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இதனை தொடர்ந்து நயன்தாராவின் கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஏகே 62 திரைப்படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டார். இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் அடி வாங்கும் நயன்தாராவிற்கு மேலும் ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

அதாவது தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் இரண்டு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இதற்காக அந்த இரண்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் 20 கோடி சம்பளமாக பேசி இருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா தற்போது பல சிக்கலில் சிக்கி வருவதால் தயாரிப்பு நிறுவனம் அவரை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அந்த இரண்டு படத்திற்காக முன் தொகையாக 20 கோடியை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் மறுபடியும் திருப்பி கேட்டு இருக்கிறது இதனால் தற்போது நடிகை நயன்தாராவிற்கு 20 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.