தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவரை தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைத்து வருகிறார்கள் ரசிகர்கள். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பல சினிமா நடிகைகள் நடித்து வந்தாலும் அவர்கள் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ஆனால் நடிகை நயன்தாரா சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கி விட்டார். அவ்வாறு நடிப்பதன் மூலம் தனக்கான இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார். தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வருகிறார். இவர் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்தாலும் தான் ஏழு வருடமாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்து கொண்ட நான்கு மாதத்திலேயே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார். ஏனென்றால் இதற்கு முன்பே இவர்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளார்கள். இந்த நிலையில் இரண்டு ஆண் குழந்தைகள் தற்பொழுது இவர்களுக்கு இருக்கின்றனர். இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் அஜித் நடிப்பில் உருவாக்கி வரும் ஏகே 62 திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.
நடிகை நயன்தாரா சினிமாவில் என்னதான் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். அந்த வகையில் தனக்கு பதினெட்டு வயது இருக்கும் பொழுது சினிமாவில் நடிக்க வந்தார் நடிகை நயன்தாரா அப்பொழுது பிரபல நடிகரின் திரைப்படத்திற்கு ஆடிஷனுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது நயன்தாராவை பார்த்த அந்த நடிகர் இது முத்தின மூஞ்சி மாதிரி இருக்கிறது என ரிஜெக்ட் செய்து விட்டாராம் அதன் பிறகு நடிகை நயன்தாரா நடிகையாக ஐயா திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு வேறொரு திரைப்படத்தில் அந்த நடிகர் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.