ஏண்டா அந்த படத்துல நடிச்சம்னு இருக்கு.! அஜித் பட இயக்குனரால் காண்டாகும் நயன்தாரா.!

nayanthara
nayanthara

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.  இவர் ஆரம்ப காலத்தில் படங்களில் நடிப்பதற்கு தடுமாறி வந்தவர் தான்.  ஆனால் தன்னுடைய விடா முயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அதேபோல் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டத்தையும் பெற்றுள்ளார்.  சமீபகாலமாக நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் வெற்றியும் கண்டு வருகிறார் ஆனால் ஒரு காலகட்டத்தில் கதையை தேர்வு செய்வதில் சொதப்பி மார்க்கெட்டே காலி ஆகும் அளவிற்கு சென்றார்.

நடிகை நயன்தாரா இயக்குனர் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருப்பவர் அதிலும் தனக்கு பிடித்த இயக்குனர் என்றால் கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொள்வார். அதேபோல் இதுவரை எந்த ஒரு இயக்குநரும் நயன்தாராவால் இவ்வளவு கஷ்டப்பட்டேன் என கூறியதே கிடையாது.

அந்தளவு தான் செய்யும் வேலையில் மிகவும் சின்சியராக இருப்பார். அதேபோல நடிகை நயன்தாரா சமீபகாலமாக கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படிதான் சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியாகிய திரைப்படம்்தான் கொலையுதிர் காலம.

ajith billa
ajith billa

இந்த திரைப்படம் பண பிரச்சனையால் சிக்கி தவித்து ஒரு வழியாக திரையரங்கிற்கு வந்து பெரும் தோல்வியை தழுவியது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் தான் சக்ரி டோலட்டி  இவர் இதற்கு முன் அஜித்தின் பில்லா-2 திரைப்படத்தை இயக்கியவர் கொலையுதிர் காலம் திரைப்படத்தில் இயக்குனர் மீது உள்ள நம்பிக்கையால் கதையை கேட்காமலேயே நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

அவரை நம்பி நடித்ததற்கு இப்படி ஒரு மோசமான திரைப்படத்தை கொடுப்பார் என்றும் அந்த திரைப்படத்தில் நடித்ததை நினைத்து இப்போதும் வெட்கப்படுகிறேன் எனவும் தன்னுடைய நட்பு வட்டாரங்களில் கூறி மிகவும் வருத்தப்பட்டாராம்.

அதனால்தான் சமீபகாலமாக நயன்தாரா கதையை முதலில் கேட்டுக்கொண்டு கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.