ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடி நயன்தாரா கிடையாது.? இவர் தானாம் – வெளிவந்த பரபரப்பு தகவல்

ajith
ajith

நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடித்த ஒரு திரைப்படம் துணிவு இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படம் திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் இந்த படத்தில் ஆக்சன், சென்டிமென்ட் போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறும் என தெரிய வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு..

மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான அமீர், சிபி போன்றவர்கள் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு  அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்து வருகிறது துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம்  படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் அஜித் நடிக்க கிட்டத்தட்ட 105 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடி நயன்தாரா கிடையாதாம் திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது மேலும் நடிகர் அஜித்குமார் இந்த படத்தில் கருப்பு கலர் முடி, கருப்பு தாடி என ஒரு மாஸான லுக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து உறுதியான தகவல் இன்னும்  வெளிவரவில்லை.