50 வினாடிக்கு 5 கோடி… பணத்தில் புரளும் முன்னணி தமிழ் நடிகை.!

nayanthra
nayanthra

Actress nayanthara : முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா விளம்பர திரைப்படங்களில் 50 வினாடிகள் நடிப்பதற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் நடிப்பில் எத்தனையோ திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல சர்ச்சைகளை சந்தித்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா ஆரம்பக் காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் அதன் பிறகு மீண்டும் கம்பக் கொடுத்து புகழின் உச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் அதேபோல் நடிகை நயன்தாரா தன்னுடைய படத்திற்கு ஏற்ப கதையை பொறுத்து ஐந்து முதல் பத்து கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகையும் இவர்தான் கடைசியாக ஷாருக்கான் அவர்களுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்காக சம்பளமாக 10 கோடி ரூபாய் பெற்றதாக தகவல் கிடைத்தது.

நயன்தாராவின் மார்க்கெட்டை புரிந்து கொண்டு வேறு வழியில்லாமல் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் முன் வருகிறார்கள் நயன்தாராவின் தற்போதைய சொத்து மதிப்பை 200 கோடி இருக்கும் என பலரும் கூறி வரும் நிலையில் இவர் விளம்பரங்களில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டாராம்.

வெறும் 50 வினாடி விளம்பரங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. நடிப்பதை தாண்டி பல தொழில்களையும் பல இடங்களில் முதலீடும் செய்தும் வருகிறார் அதன் மூலம் இவருக்கு கோடி கோடியாக பணங்கள் வருவதாக கூறப்படுகிறது அதை போல் சென்னையில் சொகுசு வீடு ஒன்றை கட்டியுள்ளார் இதில் பிரத்யோகமாக நீச்சல் குளம் திரையரங்கம் என அனைத்தும் இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் அண்டை மாநிலத்திலும் இவருக்கு சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.