தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல படங்களில் நடிப்பதால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் நடித்த “நடிகையர் திலகம்” என்ற படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்தவது அதுமட்டுமல்லாமல் தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது.
அதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் சோலோ மற்றும் விஜய், விஷால், விக்ரம், சிவகார்த்திகேயன், ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நானி உடன் கைகோர்த்து “தசரா” என்னும் படத்தில் நடித்துள்ளார் இந்த படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி..
கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் அண்ட் எமோஷனல் கலந்த ஒரு திரைப்படமாக இருக்கிறது இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பெரிய அளவில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் நயன்தாராவை புகழ்ந்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..
பெண்களை மையப்படுத்தும் கேரக்டர்கள் கொண்ட படங்கள் அதிகமாக வருகிறது அதற்கு முக்கிய காரணம் நயன்தாரா தான் அவர் தான் அத்தகைய திரைப்படங்களில் விரும்பி நடித்தார். அப்படி ஒரு படம் தான் மாயா.. இந்த படம் வந்த பிறகு தான் பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் என்ற மாற்றம் சினிமாவில் வந்தது.
அதைப் பார்த்து தான் மற்ற நடிகைகளும் பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றி பெற ஆசைப்படுகின்றனர் எனக் கூறியுள்ளார். பொதுவாக நடிகைகள் இன்னொரு வளர்ந்த நடிகை பற்றி குறை சொல்லுவது வழக்கம். ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் நயன்தாராவை புகழ்ந்து இருப்பது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.