தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தனது பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலுமே உச்ச நட்சத்திரங்களுடன் நடிப்பது, அப்படி இல்லை என்றால் பெண்களுக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் சோலோவாக நடித்து வெற்றி கண்டு வருகிறார்.
இப்படி திரையுலகில் ஓடிக்கொண்டிருந்த இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு இந்த ஜோடி 7 வருடங்கள் தொடர்ந்து காதலித்தது ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திரை உலக பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரது முன்னையிலிருந்து திருமணம் செய்து கொண்டது.
நயன்தாரா திருமணம் செய்து கொண்டதால் அவரது மார்க்கெட் சரிந்து விடும் என பலரும் கூறினர். ஆனால் நடக்கிறது எல்லாம் அதற்கு எதிர் மாறாக நடக்கிறது தற்பொழுது தான் மார்க்கெட் அவருக்கு அதிகமாகி உள்ளது. இப்போ ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குகிறார் மேலும் டாப் நடிகரின் பட வாய்ப்புகள் அவருக்கு ஏராளமாக குவிக்கின்றன.
இருப்பினும் இவர் இடத்தை பிடிக்க தற்பொழுது சமந்தா மற்றும் திரிஷா ஆகியவர்களும் தொடர்ந்து நடித்து வருகின்றனர் ஆனால் நயன்தாராவின் இடத்தை பிடிக்க சரியான ஆள் என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என கூறப்படுகிறது ஏனென்றால் நயன்தாராவை விட தற்பொழுது அவருக்கு படங்கள் அதிகமாக கிடைக்கின்றன.
இப்பொழுது மட்டுமே ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் குறைந்தது 15 திரைப்படங்கள் இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா எப்படி சோலோ கதைகளை தேர்ந்தெடுத்த நடிக்கிராரோ அதேபோல தான் தற்போது இவர் நடிப்பதால் நயன்தாராவுக்கு அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.