keerthy suresh : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் இந்த இடத்தை பிடிக்க சமந்தா, திரிஷா போன்றவர்கள் போட்டி போட்டு வரும் நிலையில் மற்றொரு பிரபலமும் இந்த ரேஸில் கலந்து கொண்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார் குறிப்பாக பிற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்து வருகிறார் கடைசியாக கூட மலையாளத்தில் கோல்ட் இப்பொழுது இந்தியில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் சமந்தாவும்..
தற்போது அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மருத்துவமனையிலேயே இது என கிடக்கிறார். இதனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நயன்தாரா, சமந்தா இல்லாத காரணத்தினால் மற்ற நடிகைகளுக்கு வாய்ப்புகள் கொடுக்கின்றனர் அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தான் முதல் சாய்ஸ் ஆக இருக்கிறாராம்..
சமீபகாலமாக அவருடைய படங்கள் வெற்றி பெறவில்லை. என்றாலும் தற்போது முன்னணி நடிகை என்ற காரணத்தினால் அவருக்கு வாய்ப்புகள் குவிக்கின்றதாம். தற்போது ஒரு படத்தில் நடிக்க அவர் 6 கோடி சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.
நயன்தாரா, சமந்தா இல்லாத சமயத்தில் மார்க்கெட்டை பிடிக்க கீர்த்தி சுரேஷ் மறைமுகமாக தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுப்பதோடு சினிமா வாய்ப்புகளையும் தட்டித் தூக்கி வருவதாக பலரும் கூறுகின்றனர். இப்படியே நீடித்தால் கீர்த்தி சுரேஷ் அவரை ஓவராக செய்துவிடுவார் என பலரும் சொல்லி வருகின்றனர். பிறகு போட்டி நடிகை கீர்த்தி சுரேஷ்கும், த்ரிஷாவுக்கும் தான்..