இயக்குனர்கள் படத்தில் நடிப்பது என்பது அடிக்கடி நிகழ்வதில்லை என்றாலும் எப்பவாவது நிகழ்கிறது, நமது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் பாலிவுட் இயக்குனர் ஒருவர் வில்லனாக நடித்து இருப்பார் அவர் வேறு யாரும் இல்லை பாலிவுட்டில் இயக்குனராக வலம் வந்த அனுராக் காஷ்யப் என்பவர் தான்.
இந்தபடத்தில் அனுராக் காஷ்யப் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அட்டகாசமான வில்லனாக நடித்திருப்பார், இந்த படத்திற்கான மிகச் சிறந்த வில்லன் கேரக்டராகவே மாறினார் அவர், இதன் மூலம் தமிழ்நாட்டில் அவருக்கென்று தனி ரசிகர்களையும் உருவாக்கிக் கொண்டார்.
இதை தொடர்ந்து தற்போது நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் நயன்தாரா ஒரு தாவரவியல் நிபுணராக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் நயன்தாரா தன்னுடைய குழந்தையை காப்பாற்ற எந்த நிலைக்கும் செல்வார் என்பது போன்ற கதாபாத்திரம் அமைந்துள்ளது என்று இந்த படத்தின் இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் பொறுப்பேற்றது, இந்த படத்திற்கு இசையமைப்பாளரான விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார், மேலும் இந்த படம் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் வெளியாக உள்ளது.
அருள்நிதி நடித்த “K 13” படத்தில் வில்லனாக “பரத் மணிகண்டன்” நடித்தார், இவர் இந்த படத்தில் இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போதெல்லாம் இயக்குனர்கள் அந்த அளவிற்கு நடிப்பது இல்லை என்றாலும் நயன்தாராவின் படத்தில் மட்டும் நடிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.