நயன்தாரா இப்ப வாங்குற சம்பளத்தை.. பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பிரபல நடிகை.! அதுவும் 13 வயதில்.

தமிழ் சினிமா உலகில் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையையும் அழகையயும் வெளிகாட்டி நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 4 கோடியில் இருந்து 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இப்பொழுது வேண்டுமானால் இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி பிரபலமாக வலம் வரலாம் ஆனால் பல வருடங்களுக்கு முன்பாகவே தனது திறமை மற்றும் அழகை காட்டி அசத்தி தனக்கென ஒரு மிகப்பெரிய இவர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் இருந்தவர்.  வைஜெயந்திமாலா இவர் முதலில் வாழ்கை என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் திறமையையும், கிளாமரையும் காட்டி நடித்து ஓடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய வயது வெறும் 13 மட்டுமே இவ்வளவு இளமையான காலத்திலேயே தொடர்ந்து நடித்து ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார் தமிழ் சினிமாவில் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென இந்தியிலும் வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கு தொடர்ந்து தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களை பெரிய அளவில் வளைத்து போட்டு கனவு கன்னியாக வலம் வந்தார்.

இப்போதைய காலகட்டத்தில் நாம் 4 கோடி, 5 கோடி ஒரு நடிகை வாங்குவது பெரிய விஷயமாக பார்க்கிறோம் ஆனால் பல வருடங்களுக்கு முன்பாகவே அதிக சம்பளம் வாங்கிய அசத்தியவர் வைஜெயந்தி மாலா. அப்போது எல்லாம் ஒரு நடிகையை வைத்து ஒரு நிறுவனம் படம் தயாரிக்கிறது என்றால் குறைந்தது நான்கைந்து வருடங்கள் அவர்களிடம் அக்ரிமெண்ட் போட்டு விடுவார்கள் அதன்படி அந்த நடிகைகள் அந்த நிறுவனத்திற்கு மட்டும் அந்த காலகட்டத்தில் படமெடுத்து கொடுக்க வேண்டும்.

vai jayanthi mala
vai jayanthi mala

அந்த நடிகைக்கு தரப்படும் சம்பளத்தை அவர்கள் குறிப்பிட்டு விடுவார்கள் அப்படி வைஜெயந்திமாலா அப்போதைய காலகட்டத்தில் அடிக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு மட்டுமே 2,650 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது தான் அப்பொழுது அவ்வளவு என்பது இப்பொழுது கோடி கணக்கில் வரும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வைஜெயந்திமாலா தனியாக பெட்ரோல் அட்வான்ஸ் எனப்படும் பேட்டா ரூபாய் கூட கொடுத்து வந்தனர். அதுவே 150 ரூபாய் வருமாம்.

Leave a Comment