நயன்தாரா நடிப்பு “மண்ணாங்கட்டி” வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Nayanthara

Nayanthara in Mannangatti : தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி  உலகம் எங்கும் கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இதுவரை மட்டுமே 700 கோடிக்கு மேல் வசூலில் உள்ளது. அடுத்து நயன்தாரா டெஸ்ட், நயன்தாரா 75 ஆகிய படங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிய..

நிலையில் மற்றொரு புதிய படத்திலும் நயன்தாரா இணைந்துள்ளார். அதனுடைய போஸ்டர் கூட தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மண்ணாங்கட்டி படத்தில் தான் நயன்தாரா நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து யோகி பாபு நடிக்கயுள்ளார். இந்த படத்தை ட்யூட் விக்கி இயக்க உள்ளார்.

Actress Nayanthara
Actress Nayanthara

ஷீன் ரோல்டன் இசையில் இந்த படம் உருவாக இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது இதில் கோயில், நீதிமன்றம் இருப்பது  போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் நயன்தாராவின் கண் வந்து போகிறது இதையெல்லாம் வைத்து பார்க்கையில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் போஸ்டரே வித்தியாசமாக இருக்கிறது டைட்டில் வேற லெவல் மொத்தத்தில் இந்த படம் வெற்றி பெற வேண்டுமென நயன்தாராவை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.