லோகேஷின் அடுத்த படத்தில் நயன்தாரா ஹீரோயின்.. ஹீரோ யார் தெரியுமா.? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

logesh-nayanthara
logesh-nayanthara

தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் நடிக்க தொடங்கி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரையிலும் டாப் நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டு நடிப்பது மற்றும் சோலோ படங்களையும் கொடுத்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் நயன்தாரா இப்போது வரும் பல இளம் நடிகைகளுக்கு இன்ஸ்பைரிங்காக இருந்து வருகிறார். இப்படி சினிமாவே கதியென இத்தனை வருடங்களாக இருந்து வந்த நயன்தாரா அண்மையில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமண வாழ்க்கையும் தற்போது சிறப்பாக இருக்கிறது. பெரும்பாலும் நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு பட வாய்ப்பு கிடைக்காது என சொல்வார்கள்.

ஆனால் நயன்தாரா அப்படி இல்லை.. கல்யாணத்திற்கு பிறகு தான் அவர் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றத்தை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் படத்தில் நடித்து வருகிறார் மற்றும் ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்திலும் ஹீரோயின்னாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அடுத்து சமையல் கலையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு படத்திலும் நயன்தாரா கமிட் ஆகியுள்ளார். இப்படி இருக்க தற்போது நயன்தாரா புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். ஆம் தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் இளம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறாராம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது நயன்தாரா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.