Nayanthara: இயக்குனர் அட்லீயினால் தனது மனைவி நயன்தாராவின் பின்னாடியே இயக்குனர் விக்னேஷ் சிவன் சுற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை நயன்தாரா சமீப காலங்களாக பெரிதாக தமிழில் பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
எனவே தமிழை தவிர்த்து மற்ற மொழி திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து வரும் நிலையில் சில பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்துடன் இருந்தவரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்கள். ஒருபுறம் சினிமாவில் மிகவும் பிசியாக இருந்தாலும் தனது குழந்தைகளுக்காக தன்னால் முடிந்தவரை நயன்தாரா நேரங்களை செலுத்தி வருகிறார் அது குறித்த புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருக்கும் நிலையில் ஜவான் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இவ்வாறு இதனை அடுத்து நயன்தாராவிற்கு சல்மான் கான், அமீர்கான் என தொடர்ந்து முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என நினைத்த விக்னேஷ் சிவனுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லையாம் எனவே இதற்கெல்லாம் காரணம் அட்லீ தான் என கடும் கோபத்தில் இருந்து வருகிறாராம்.