தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்திற்கு பிறகு நயன்தாரா அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார். மேலும் தற்போதெல்லாம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வமுடையவராக திகழ்கிறார்.
அதுவும் முக்கியமாக இயக்குனர் விக்னேஷ் சிவனை எப்பொழுது காதலிக்க ஆரம்பித்தார். அதிலிருந்து ரோமான்ஸ் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்காமல் காமெடியும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கெத்தாக இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ஜி.எஸ்.விக்னேஷ் o2 படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். உயிருக்காக போராடும் மனிதர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து தனது உயிரையே அர்ப்பணித்து போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நயன்தாராவுக்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பினை பெற்று பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நயன்தாரா பயணிக்கும் பஸ் விபத்துக்கு உள்ளாகிறது அப்போது பஸ்சில் இருக்கும் மனிதர்கலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றன தீவிரவாதிகள் பஸ்சில் உள்ளவர்களை கொள்வதற்காக திட்டம் செய்கின்றனர்.
எனவே நயன்தாரா எப்படியாவது நிறுத்தி அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று போராடுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் O2 திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் ரசிகர்கள் திரைப்படத்திற்காக மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.