Actress Lady Superstar Nayanthara cry video:நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டனய. ஆனால் இன்னும் முன்னணி நடிகையாக தான் நயன்தாரா வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி ஐயா திரைப்படத்தின் மூலம் நயன்தாரா அறிமுகமானார்.
இதற்கு முன் மலையாள சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் நயன்தாரா. அதன்பின்பு தமிழ்சினிமாவில் நடிக்க வந்த பிறகு தமிழ் மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். அதனால் தொடர்ந்து தமிழிலேயே நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் தெலுங்கிலும் நடித்து வந்தார்.
தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் தமிழில்தான் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார் என்ற நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா அவர்களுடன் நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதையாக நடித்து இருந்தார், அந்த திரைப்படத்தில் பாலகிருஷ்ணா அவர்கள் ராமராக நடித்திருந்தார் நயன்தாரா சீதையாக நடித்து இருந்தார்.
இந்த படத்தின் சூட்டிங்கை நல்லபடியாக நடித்துக் கொடுத்த நயன்தாரா மீது படக்குழுவினர் மலர்கள் தூவி வாழ்த்தினார்கள். நயன்தாரா உடனே ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உச்சகட்ட ஆனந்த கண்ணீரில் அழுதார். அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு இயக்குனரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.