அன்னைக்கு நீங்க செஞ்ச உதவி இன்னைக்கு என்ன காப்பாத்துது.? மூத்த பத்திரிகையாளரின் காலில் விழுந்த நயன்தாரா

nayanthara
nayanthara

மலையாள நடிகையான நயன்தாரா ஆரம்பத்தில் அங்கே ஒன்னு, ரெண்டு திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக மாறியதை அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அப்படி ரஜினியின் சந்திரமுகி படத்தில் நயன்தாரா ஹீரோயின்னாக நடித்தார்.

அந்த படம் அதிக நாட்கள் ஓடியது உடன் மட்டுமல்லாமல் நயன்தாராவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் இப்பொழுதும் கூட டாப் நடிகரின் படங்கள் நடிப்பதால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் தனது சமபளத்தை உயர்த்தி உள்ளார்.

தற்பொழுது ஜவான் படத்திற்கு கூட அவர் 8 கோடி சம்பளம் வாங்குகிறார் இதனால் தென்னிந்திய சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என பெயர் எடுத்திருக்கிறார் நயன்தாரா இப்படி திரை உலகில் வெற்றி நாயகியாக ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா பற்றிய பழைய மற்றும் புதிய செய்திகள் இணையதள பக்கங்களில் உலா வருவது வழக்கம்..

அதன்படி பத்திரிகையாளர் செய்யாறு பாலு நடிகை நயன்தாரா பற்றி பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஆரம்ப காலகட்டத்தில் நடிகை நயன்தாரா பல பிரச்சனைகளை சந்தித்தார் முக்கியமாக காதல் தொடர்பாக அதிக பிரச்சனைகளை சந்தித்தார். இதனால் நயன்தாரா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து விட்டார் அதன் பிறகு சில காலங்கள் நயன்தாரா குறித்து எந்த ஒரு செய்தியும் பெரிதாக வராமல் இருந்தது அப்பொழுது மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மட்டும் நயன்தாரா குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தார்.

சில காலங்கள் கழித்த பிறகு பாஸ் என்கின்ற பாஸ்கரன் திரைப்படத்தில் நடிக்கும் போது மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார் நயன்தாரா அந்த சமயத்தில் அந்த மூத்த பத்திரிகையாளரும் அந்த பேட்டிக்கு வந்திருந்தார் அவரை பார்த்த நயந்தாரா உடனே அவரது காலில் விழுந்து வணங்கினார் நீங்கள் எழுதிய அந்த கட்டுரை என் சினிமா வாழ்வு மேம்பட முக்கிய காரணமாக இருந்தது.

அதற்கு நன்றி என கூறினாராம் நயன்தாரா. இவ்வளவு நாள் பத்திரிகையாளர்களை மதிக்காமல் தான் நயன்தாரா யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை என பலரும் நினைத்துக் கொண்டிருக்க அவருக்கு இந்த மன அழுத்தத்தால் தான் அவ்வளவு நாள் பத்திரிகையாளர்களை பார்க்காமல் இருந்தார் என்ற விஷயம் இந்த நிகழ்வின் மூலம் பத்திரிகையாளர்களுக்கு தெரிந்தது என கூறினார்.