லேடி சூப்பர்ஸ்டார் என்ற கௌரவ பட்டத்தோடு தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா இவரது நடிப்பில் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் நயன்தாரா பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவரது காதலனான விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சேதுபதியும் சம்பந்தவும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் நிறைய குடியிருப்பு இடத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டன.
அப்பொழுது நயன்தாராவை காண நிறைய இளைஞர்களும் வாலிபர்களும் பொது மக்களும் கூடி வந்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் அவர்களை தடுப்பதற்காக போலீசாரும் பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் மக்களை தடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை வைத்துப் பார்க்கும் பொழுது சக நடிகர்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் நயன்தாராவுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து விடலாம்.
இந்த தகவல் நயன்தாராவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.