தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நடிகைதான் நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது இவர்களுடைய காதல் திருமணம் வரை சென்றுவிட்டது.
அந்தவகையில் இவர்களுடைய திருமணம் எப்பொழுது நடக்கும் என எதிர்பார்த்துக் கொண்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில் நிச்சயதார்த்தத்தை காதும் காதும் வைத்தது போல நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு ஜூன் 9ஆம் தேதி இவருடைய திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளது என கூறப்பட்டது.
ஆனால் இந்த திருப்பதியில் திருமணம் செய்தால் வெறும் 150 நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியும் என்று கூறியதன் காரணமாக பின்னர் திருமணம் செய்துகொள்ள போகுமிடத்தில் மாற்றம் செய்து கொண்டார்கள். அந்த வகையில் இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக ஹோட்டலில் நடத்த முடிவு செய்துவிட்டார்கள்.
ஆனால் முதலில் திருப்பதியில் நடக்க வேண்டிய திருமணம் 150 பேருக்கு மேலாக கலந்து கொள்ள முடியாததால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டது என நினைத்த நிலையில் தற்போது மற்றொரு செய்தி வெளியாகி ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை வீடியோ ஒளிப்பதிவு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பெரிய தொகையை கொடுத்து வாங்கி உள்ளார்களாம்.
இதனால் அந்த திருமண நாளை மிக பிரம்மாண்டமாக கலர்புல்லாக எடுக்கவேண்டும் என்ற காரணத்தினால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தற்போது இந்த மகாபலிபுரத்தில் நடந்த பட வேண்டிய ஆயிற்று.