22 வயதே ஆனா இளம் நடிகருடன் டூயட் பாட இருக்கும் 36 வயது நயன்தாரா.! யாருப்பா அந்த லக்கி நடிகர்.!

nayanthara netrikkan movie : நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், இயக்குனர் மிலந்த்  ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண்.

நடிகர் சித்தார்த் ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அவள், இந்த திரைப்படத்தை சித்தார்த் தான் தயாரித்திருந்தார், 2017ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவள் படத்தின் இரண்டாம் பாகத்தை கவனித்து வந்தார் மிலந்த்  ராவ். ஆனால் ஒரு காலகட்டத்தில் அந்த திரைப்படத்தின் பணி தள்ளிப்போனதால் தனது புதிய திரைப் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

என்னுடைய புதிய கதையை உருவாக்கியதும் அந்த கதையில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்தார் அதன்பிறகு நயன்தாராவிடம் கதையை கூறியுள்ளார் நயன்தாராவும் ஓகே சொல்லிவிட்டார். அதுமட்டுமில்லாமல் இந்த கதையை நயன்தாராவின் காதலர் கேட்டுவிட்டு படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்க முன்வந்தார்.

இந்த திரைப்படத்திற்கு நெற்றிக்கண் என பெயர் வைத்து போஸ்டரை வெளியிட்டார்கள், நெற்றிக்கண் திரைப்படம் ரஜினி நடிப்பில் மாபெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் இந்த திரைப்படத்தின் டைட்டில் உரிமையை கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக பெற்று தலைப்பை வைத்தார்கள்.

மேலும் நேற்றிகன் திரைப் படத்தில் நயன்தாராவின் முந்தைய படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து சற்று வேறுபட்ட இருக்குமெனவும் இயக்குனர் மிலந்த் ராவ் கூறியுள்ளார், நடிகை நயன்தாரா சில காலமாகவே மிகப்பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு சொல்லிக் கொள்ளுமளவு வெற்றியை கொடுக்கவில்லை.

அதன் பிறகு நெற்றிக்கண் திரைப்படத்தில் தான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நயன்தாரா ஒரு பார்வையற்ற பெண்ணாக நடிக்க இருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் இளம் நடிகர் சரன் சக்தி ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். மேலும் நடிகை நயன்தாராவிற்கு தற்பொழுது வயது 36 இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் சரண் சக்திக்கு வயது 22 தான்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version